திருகோணமலையில் 'சட்டமும் மக்களும்' நூல் வெளியீடு
மறைந்த ஆசிரியர் அ.க. இராமலிங்கத்தின் 25ஆம் ஆண்டு நினைவையொட்டி அவரது புதல்வரான மூத்த வழக்குரைஞர் இரா.திருக்குமரனது 'சட்டமும் மக்களும்' நூல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்றையதினம்(15.06.2025) திருகோணமலை இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
மலரின் சிறப்பு பிரதிகள், கிழக்கு மாகாண ஆளுநரது பிரத்யேக செயலாளர் V.இராஜசேகர், ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் பிரதம குருக்கள், இ. கி. ச. இந்துக் கல்லூரியின் அதிபர் S.கணேஷலிங்கம், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் உ.அஜித்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
வெற்றிக் கோப்பைகள்
மேலும், அறிவு ஒளி மையத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நடைபெற்ற பேச்சு, கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் மற்றும் பதங்கங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், திருக்கோணமலையின் முன்னணி பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், அரசியற் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri
