இளம் சமூகத்தை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பில் மாணவர்களால் மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி
அதிகரித்துவரும் தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் இளம் சமூகத்தினை பாதுகாக்கும் வகையில் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் இன்று (15)மாபெரும் விழிப்புணர்வு சைக்கிள் பவனி நடாத்தப்பட்டது.
மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
பாடசாலையின் மாணவர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோரின் ஏற்பாட்டிலும் பங்குபற்றுதலுடனும் சிறப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் கு.பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் இந்த சைக்கிள் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையில் ஆரம்பித்த சைக்கிள் பவனியானது சவுக்கடி வீதி,விநாயகபுரம் வீதி,முருகன்கோவில் வீதி சென்று ஜனாதிபதி வீதியூடாக பாடசாலையினை வந்தடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இளம்வயதினர் தவறான முடிவெடுத்து உயிரிழக்கின்றமை குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் நடாத்தப்பட்ட இந்த சைக்கிள் பவனியின்போது தற்கொலைகளை தடுப்பது குறித்தான துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.









நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
