ராஜபக்சர்களால் இனி மீண்டெழவே முடியாது! அநுர அரசு பகிரங்கம்
ராஜபக்சர்களின் அரசியல் கதை இந்த நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது என அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
மீண்டும் மகிந்த சூறாவளி என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ராஜபக்சர்களின் கதை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விளக்கேற்றிய பின்னர் அந்த விளக்கின் வெளிச்சம் ஒரு கட்டத்தில் பிரகாசமாகத் தென்படும். அதாவது விளக்கு அணையப் போகின்றது என்பதே அதன் அர்த்தம். எனவே, அரசியல் ரீதியில் ராஜபக்சர்களின் கதை முடிந்துவிட்டது.

இலங்கையில் இனி அந்தப் பழைய கலாசாரத்துக்கு இடமில்லை. தற்போது சிறப்பாக இருக்கின்ற அரசியல் கலாசாரத்தைவிட சிறந்த ஒன்று வந்தால் மக்கள் ஆதரிப்பார்கள். அரசியல்வாதிகளின் சொத்து விவரம் இதுவரையில் வெளிவராமல்தான் இருந்தது.
அவற்றைக்கூட வெளியிடுவதற்கு நாமே நடவடிக்கை எடுத்தோம். அரசியலில் ஈடுபடும் அனைவரும் கள்வர்கள் அல்லர். எவரேனும் முறையற்ற விதத்தில் சொத்து திரட்டி இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்.
சட்டம் தற்போது அனைவருக்கும் சமம் என்ற வகையில் நடைபெற்றுக வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri