இலங்கை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொடர்பில் வெளியான தகவல்
வெளிநாடுகளில் பணிபுரியும் போது உயிரிழக்கும் புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை ரூ. 600,000லிருந்து ரூ. 20 இலட்சமாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களின் இழப்பீடு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு மூலம் வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை தொழிலாளிக்கு இந்த இழப்பீடு உரித்தாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு 5.2 பில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இதுவரை சுமார் 220,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடிச் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பணவனுப்பல் 7 பில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்! உலகின் அதிபதியாக உருவெடுக்க போகும் முக்கிய நபர்



