மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா

Sri Lanka Police Sri Lanka Police Investigation Indian High Commissioner Santosh Jha
By Rakesh May 26, 2026 05:34 AM GMT
Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பாவனைக்காக இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கப் ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் விசேட நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், ஜனாதிபதியுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உள்ளிட்ட முக்கிய அரச உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்தியத் தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்த விசேட வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2025 ஜனவரியில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது.

மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள்

மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த தயங்கும் அநுர அரசாங்கம்.. எழும் தொடர் விமர்சனங்கள்

134 வாகனங்கள் 

நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இத்திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க முடிந்ததையிட்டு இந்தியா மகிழ்ச்சியடைகின்றது. ஆரம்பத்தில் 80 கப் ரக வாகனங்களை மட்டுமே வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மோடி - அநுரவின் மக்கள் நலன்சார் தொலைநோக்கு.. மகிழ்ச்சி வெளியிட்ட சந்தோஷ் ஜா | Santosh Jha Proud On Present 134 Police Vehicles

எனினும், இரு தரப்பினருக்கும் இடையே நிலவிய மிக நெருக்கமான கூட்டுப் பொறுப்பின் காரணமாக, தற்போது அந்த எண்ணிக்கையை 134 வாகனங்களாக அதிகரித்து வழங்க முடிந்துள்ளது.

இது இரு நாடுகளின் சிறந்த ஒத்துழைப்புக்குச் சான்றாகும். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் வெறும் அரசியல் ரீதியானவை மட்டுமல்ல, அவை வரலாற்று ரீதியான மக்கள் பிணைப்பைக் கொண்டவை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தொலைநோக்குப் பார்வையும் எமக்கு வழிகாட்டுகின்றன.

அந்த வழிகாட்டல்களுக்கு அமைய, எமது அனைத்துக் கொள்கைகளும் மக்களின் நலனை மையமாகக் கொண்டதாகவே அமைகின்றன. அரசுகள் என்ற ரீதியில் மக்கள் நலன்சார் கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் முன்னெடுத்து வரும் தூய்மையான நிர்வாகம் மற்றும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் வேலைத்திட்டங்களுக்குத் தேவையான இந்த உதவிகளை வழங்குவதில் இந்தியா பெருமகிழ்ச்சியடைகின்றது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய கப் ரக வாகனங்கள் அனைத்தும் உள்ளூர் மற்றும் கிராமிய சமூக மட்டத்திலான பொலிஸ் சேவைகளை மேலும் பலப்படுத்தவும், குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் பெரிதும் உதவும் என நம்பப்படுகின்றது.

இவ்வாறான காத்திரமான செயற்பாடுகள் ஊடாக இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால நட்புறவும், மக்களின் பிணைப்பும் எதிர்காலத்தில் மேலும் பலமடையும்." என்றும் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தனது உரையில் நம்பிக்கை வெளியிட்டார். 

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு பெற்ற விவகாரம்! சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

காரில் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி மூவர் கைது..! தீவிரப்படுத்தப்படும் விசாரணை

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US