அரகலய போராட்டம் முதல் ஆட்சி வரை.. கருப்பு கொடி குறித்து சங்குக் கூட்டணி கேள்வி

Sri Lanka Politician Sri Lankan protests Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Feb 13, 2026 02:17 PM GMT
Report

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

இது குறித்து ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு சின்னக் கட்சி) சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் இன்று(13.02.2026) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன்

சட்டவிரோதமான செயல்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தோ உண்ணாவிரதம் இருந்தோ பிரயோசனம் இல்லை -அ.உமாமகேஸ்வரன்

கரிநாள் அனுஷ்டிப்பு

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிக நீண்டகாலமாக சுதந்திர தினத்தையும் அதற்குப் பின்னர் 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசாகிய போது கொண்டுவரப்பட்ட குடியரசு அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளமையுடன் அவற்றை கரிநாள்களாகவும் பிரகடனப்படுத்தி வந்துள்ளனர்.

அரகலய போராட்டம் முதல் ஆட்சி வரை.. கருப்பு கொடி குறித்து சங்குக் கூட்டணி கேள்வி | Sanguk Alliance Questions About Black Flag

இலங்கை என்பது சிங்கள, தமிழ் இராசதானிகளாக பிளவுபட்டு இருந்ததென்பதும் 1883ஆம் ஆண்டு காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் தமது நிர்வாக வசதிக்காக ஒன்றாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.

ஒன்றிணைத்த இராசதானிகளை சிலோன் என்ற பெயரில் சூழ்ச்சியின் காரணமாக பெரும்பான்மையினமான சிங்கள தரப்பிடம் கையளித்து விட்டுச் சென்றார்கள் என்பதும் வரலாறு.

உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உமா ஓயா திட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஆகவே, இவ்வாறான சுதந்திர தினத்தையோ அல்லது குடியரசு தினத்தையோ தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பெரும்பான்மை சிங்கள அரசுகளால் தமிழ் மக்களின் மொழியுரிமை, வாழ்விட உரிமை, கல்வி உரிமை, வேலைவாய்ப்புக்கான உரிமை போன்றவை பல்வேறு வழிகளில் நிராகரிக்கப்பட்டு தமது சுதந்திரத்தைத் தாமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாகத்தான் இங்கு நீண்டதோர் ஆயுதப்போராட்டமே நடைபெற்றது.

எனவே, தமிழ் மக்கள் ஏன் போராடுகிறார்கள்? அரசின் தமிழர்களுக்கு எதிரான அனைத்துச் செயற்பாடுகளையும் ஏன் எதிர்க்கிறார்கள்? ஏன் கறுப்புக்கொடி ஏற்றுகின்றார்கள்?

கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது ஏன்?

ஏன் ஊர்வலங்களையும் கவனவீர்ப்புப் போராட்டங்களையும் நடத்துகின்றார்கள்? என்பதற்கு அரசு சரியான தீர்வைக் கண்டுகொள்ள வேண்டுமே தவிர, ஜனநாயகபூர்வமான எதிர்ப்பைக் காட்டும் மக்களையோ மாணவர்களையோ தண்டிப்பதானது ஜனநாயக விரோதமானதும் சட்டவிரோதமானதுமாகும்.

அரகலய போராட்டம் முதல் ஆட்சி வரை.. கருப்பு கொடி குறித்து சங்குக் கூட்டணி கேள்வி | Sanguk Alliance Questions About Black Flag

இலங்கையின் அடிப்படை உரிமைகளில் பேச்சுரிமை, எழுத்துரிமை, ஒன்றுகூடுவதற்கான உரிமை, ஜனநாயக வழிமுறைகளில் கறுப்புக்கொடி ஏற்றுதல் உட்பட எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையில் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு கறுப்புக்கொடி ஏற்றுவது இயல்பானது.

தமிழ் மக்கள் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றார்கள் என்பதும் தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதும் துக்ககரமான செயற்பாடே.

முகமூடியுடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம்: சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு கரிநாளே...!

முகமூடியுடன் ஆட்சிக்கு வந்த அநுர அரசாங்கம்: சிறிலங்கா சுதந்திரதினம் ஈழத் தமிழர்களுக்கு கரிநாளே...!

அவ்வாறான துக்ககரமான செயற்பாட்டின் போது பல்கலைக்கழகத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ கறுப்புக் கொடி கட்டுவது சட்டவிரோதம் என சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

மக்களுக்கோ அன்றில் சொத்துக்களுக்கோ எந்தவித இடையூறும் விளைவிக்காமல் மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டுவது என்பது ஜனநாயக பூர்வமான நடவடிக்கையே.

யாழ். பல்கலையில் கறுப்புக்கொடி ஏந்தும் மாணவர்கள்

கடந்த 4ஆம் திகதி யாழ். பல்கலைக்கழத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய மாணவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய ஆணைக்கழகம் கோருவதும் அதனைப் பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்பதும் சட்டவிரோதமானதுடன் ஜனநாயக விரோதமானதுமாகும் என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி கருதுகின்றது.

அரகலய போராட்டம் முதல் ஆட்சி வரை.. கருப்பு கொடி குறித்து சங்குக் கூட்டணி கேள்வி | Sanguk Alliance Questions About Black Flag

மாணவர்களின் அடிப்படை உரிமைகளிலோ ஜனநாயக வழிமுறையிலான போராட்டங்களிலோ தலையீடு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாகவும் அச்சவுணர்வின்றியும் தமது கல்வியைத் தொடர பல்கலைக்கழக ஆசிரிய சமூகம் அதற்கான பொதுவெளியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

பல்வேறுபட்ட மாணவர் போராட்டத்தை நடத்தி மிகப் பிரமான்டமான அறகலய போராட்டத்தின் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ் மாணவர்களின் ஜனநாயக பூர்வமான போராட்டங்களை நசுக்குவதோ அன்றி அவர்களைத் தண்டிப்பதோ சரியானதா என்பதை ஆட்சியிலிருப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US