சங்கக்காரவுக்கு சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, எம்.சி.சி உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷாவும் இந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளார்.
குழு அங்கத்தவர்கள்
குறித்த குழுவில் முன்னாள் இந்திய தலைவர், சவுரவ் கங்குலி, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தொடக்க வீரர் கிரேம் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குநர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், இங்கிலாந்து மகளிர் அணி தலைவி ஹீதர் நைட் மற்றும் ஜியோஸ்டார் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சோக் குப்தா ஆகியோர் புதிய ஆலோசனைக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக ஜூன் 07 மற்றும் ஜூன் 08 ஆகிய திகதிகளில் எம்.சி.சி உலக கிரிக்கெட் ஆலோசனைக் குழு கூடும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
