சுற்றுலா இங்கிலாந்து அணியை முதல் போட்டியில் தோற்கடித்த இந்திய அணி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் காடனில் இன்று(22.01.2025) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 132 ஓட்டங்களை பெற்றது.
இதில், ஜோஸ் பட்லர் 68 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இலகுவான வெற்றி
இதனையடுத்து, 133 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 133 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் அபிசேக் சர்மா 79 ஓட்டங்களை பெற்றார். அதில் 8 ஆறு ஓட்டங்களும் அடங்கியிருந்தன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |