சாவகச்சேரி - நுணாவிலில் மண் கடத்தல்: தப்பியோடிய டிப்பர் சாரதி
நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் வாகனத்தை சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸார் மறித்ததையடுத்து வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ளார்.
குறித்த சம்பவமானது, இன்று (06.03.2024) புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எனினும், குறித்த டிப்பர் வாகனம், நிறுத்தாமல் சென்றதையடுத்து அதனைத் துரத்திச் சென்ற பொலிஸார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இதன்போதே, டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார். அத்துடன், தமது ஊரில் மண் கடத்தல் இடம்பெறுவதை அறிந்த அந்த ஊர் இளைஞர்கள் மூவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் டிப்பரை துரத்தி வந்துள்ளனர்.
@tamilwinnews மண் கடத்தல் துரத்தி வந்த இருவர் கைது #Lankasrinews #Tamilwinnews #Srilanka #Jaffna #Sand ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
அதனையடுத்து, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஊர் இளைஞன் அங்கிருந்து சென்ற நிலையில், மற்றைய மோட்டார் சைக்கிள் சாரதி மதுபோதையில் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார். டிப்பர் சாரதி இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதோடு மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam