சனத் நிஷாந்தவிற்கு அனுதாப விவாதம்: பல கட்சி தலைவர்கள் பங்கேற்பு
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சார்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை அனுதாப விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெறும் என நாடாளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பல கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
விவாதத்தை காண குடும்பத்தினருக்கு வாய்ப்பு
சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சாமரி பெரேரா மற்றும் அவர்களது மூன்று பிள்ளைகளும் இந்த விவாதத்தைக் காண நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் திகதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
