இந்திய தூதுவரை சந்தித்த சனத் ஜயசூரிய
இலங்கையில் புதிதாக சுற்றுலா மேம்பாட்டு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்தாலாய்வு..
நாட்டின் பொருளாதார நெருக்கடியை போக்கும் வகையில் இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் டுவிட் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதேவேளை சுற்றுலாத்துறையில் தங்கியுள்ள 30 இலட்சம் பேரின் நலன் கருதியே தாம் சுற்றுலா மேம்பாட்டு தூதுவர் பதவியை ஏற்றுக்கொண்டதாக சனத் ஜெயசூரிய, கடந்த 5ஆம் திகதியன்று தெரிவித்துள்ளார்.
#SriLanka's newly-appointed tourism brand Ambassador, cricket legend @Sanath07 met High Commissioner today. The meeting focused on strengthening ties between the people of ?? and ?? and promoting tourism as an instrument for economic recovery . pic.twitter.com/25qKxQSEtX
— India in Sri Lanka (@IndiainSL) August 8, 2022