பசில் - பிள்ளையான் டீல்: வியாழேந்திரனுக்கு பூட்டப்பட்டது கதவு! உண்மையை உடைக்கும் சாணக்கியன்(Video)
இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் தான் முரண்படுவதாக காட்டிக் கொண்டு, அவர்களுடன் இணைந்து பசில் ராஜபக்சவின் வழிநடத்தலில் பிள்ளையான் வியாபாரங்களில் ஈடுபட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இல்லையென்றால் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு இன்று பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் எங்கிருந்து கிடைக்க முடியும்? மக்களுடைய சொத்துக்களை அபகரித்த காரணத்தால் தான் அவருக்கு இவ்வளவு சொத்துக்கள் கிடைத்துள்ளன என தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான ஊடறுப்பு நிகழ்ச்சி,
