அமைச்சர் மற்றும் பிரதியமைச்சரின் ஊழல் தொடர்பில் அம்பலப்படுத்திய சாணக்கியன்!
அமைச்சர் சத்துரங்க அபேசிங்க மற்றும் பிரதியமைச்சர் நஜீத் இந்திக்க ஆகியோர் கிங்ஸ்பெரி ஹோட்டலில் வர்த்தகர் ஒருவரை சந்தித்து கலந்துரையாடியதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (2025.10.22) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில்,
“களுத்துறை கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தி நிறுவனத்தை விற்பனை செய்வதற்காகவே இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
விசாரணைகள்
இது வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டு இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது மிகவும் விசேடமான அனுமதிப்பத்திரமாகும். பிரித்தானியர் காலம் முதல் நடத்தப்பட்டு வருவதாகும்.
கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான இந்த அனுமதிப்பத்திரத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவே முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
நான் குறித்த தனியார் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அதற்கான கடிதமும் என்னிடம் இருக்கிறது. துரிதமாக இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமானதை எவ்வாறு இவர்களுக்கு விற்க முடியும்? மேலும் சத்துரங்க அபேசிங்க வர்த்தக அமைச்சரும் அல்ல. அவர் தொழில்நுட்ப அமைச்சராவார். அவர் கிங்ஸ்பெரிக்கு ஏன் சென்றார்? சிசிடிவி காணொளிகளை எடுத்து பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



