சம்பத் மனம்பேரிக்கு 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணை
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி வழங்கியுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்த சம்பவம் தொடர்பாக அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
விசாரணை நடவடிக்கை
சம்பத் மனம்பேரி, நீண்ட நாள் தலைமறைவாகியிருந்த நிலையில் அண்மையில் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் பாதாள உலக கும்பல்களுடன் நெருங்கிய உறவைப் பேணி பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டிருந்தது விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சந்தேகநபரான சம்பத் மனம்பேரி, கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பணியாளராகவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
