அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் : சம்பந்தன் எச்சரிக்கை

Ilankai Tamil Arasu Kachchi R. Sampanthan Eastern Province Northern Province of Sri Lanka
By Rakesh Jan 15, 2024 01:29 AM GMT
Report

தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். எனவே, இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதி முக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தைத்திருநாள் நல்வாழ்த்து

அவர் மேலும் கூறுகையில்,

"இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு நியாயமான நிரந்தர அரசியல் தீர்வு எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று இந்த நன்னாளில் பிரார்த்தனை செய்கின்றேன். இலங்கையில் நீண்ட காலமாகத் தேசிய இனப்பிரச்சினை தொடர்கின்றது. இன்னமும் அரசியல் தீர்வு காணப்படவில்லை.

அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் : சம்பந்தன் எச்சரிக்கை | Sampanthan S Pongal Greeting Message

இந்த நாட்டில் பெரும்பான்மை இனமாக வாழும் சிங்கள மக்களுக்கும் சிறுபான்மை இனமாக வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் இடையில் அரசியல் சாசனம் ரீதியாக எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படவில்லை.

இது சம்பந்தமாகக் கடந்த காலங்களில் பல பேச்சுவார்த்தைகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நடைபெற்றன. அந்தப் பேச்சுகளுக்குத் தமிழ்த் தரப்பினர் தம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்கினர். ஆனால், இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசுகள் தீர்வை வழங்க முன்வரவில்லை.

தேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

தேர்தலின் பின் ஆனந்த சங்கரியின் நிலையே தமிழரசுக்கட்சிக்கும்

அதியுச்ச அதிகாரப் பகிர்வு

இந்த நிலைமை இனியும் தொடர இடமளிக்க முடியாது. தமிழ்பேசும் மக்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தங்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் எமது தமிழ்த் தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.

அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் : சம்பந்தன் எச்சரிக்கை | Sampanthan S Pongal Greeting Message

அதாவது அவர்களுடைய தலைவிதியை அவர்களே நிர்ணயிக்கக்கூடிய நிலைமை வடக்கு - கிழக்கில் ஏற்பட வேண்டும். ஆனபடியால் இந்த வருடத் தைப்பொங்கல் தமிழர்களுக்கு அதிமுக்கியமான பொங்கல். இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்.

நாம் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றோம். இனியும் ஏமாற முடியாது. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் நியாயமான அரசியல் தீர்வு வேண்டும்.

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு வடக்கு - கிழக்கில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் அந்தத் தீர்வு இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்: மேர்வின் சில்வா எச்சரிக்கை


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US