சமிந்த விஜேசிறியின் பதவி விலகலின் பின்னணியிலுள்ள ஒப்பந்தம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் பதவி விலகலின் பின்னணியில் கூறப்படும் ஒப்பந்தம் தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கட்சியின் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் நாடாளுமன்றத்திற்கு வருவதற்காக அவரிடம் இருந்து 90 மில்லியன் ரூபா பணம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அளுத்கமகேயின் கோரிக்கை
எனவே சபாநாயகர் இது குறித்து ஆராயவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன் இந்த செயற்பாடு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மோசமாக பாதித்துள்ளது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள நயன வாசலதிலக்க இரட்டைப் பிரஜை என்பதால் அவருக்கு சத்தியப்பிரமாணம் செய்வதில் சிக்கல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தாநந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்பதால் பட்டியலில் அடுத்தவருக்கு பதவிப் பிரமாணம் செய்வதில் சிக்கல் உள்ளது. சபாநாயகர் இந்த விடயங்கள் அனைத்தையும் கவனிக்க வேண்டும் என்று அளுத்கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
