சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா

R. Sampanthan Sri Lanka Tamil National Alliance
By Theepan Jul 06, 2024 10:40 PM GMT
Report

தமிழ் அரசுக் கட்சியின் முதுபெரும் தலைவரும், ஈழத் தமிழர்களின் தலைவராக போருக்குப் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டு காலம் அங்கீகரிக்கப்பட்டு வந்திருப்பவருமான இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ந.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தேர்தல் வெற்றியின் பின்னர் உமா குமரனின் உறுதிமொழி

பிரித்தானிய தேர்தல் வெற்றியின் பின்னர் உமா குமரனின் உறுதிமொழி

அரசியல் ஆலோசனைகள்

மேலும் அந்த அறிக்கையில்,

"தனது இளம் வயதிலிருந்தே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த சம்பந்தன், 1961ஆம் ஆண்டில் 28 வயதுடைய இளம் சட்டத்தரணியாக, தமிழரசுத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பனாகொட இராணுவ முகாமில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது அதிகம் அறியப்பட்டிராத நிகழ்வாகும்.

1972ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது முதல் தீவிர அரசியலில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா | Sambandhan S Demise Evokes Deep Feelings Srikanta

1977ஆம் ஆண்டில் திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் அரசியல் அரங்கில் அவர் நன்கறியப்பட்டிருந்தார். அவரின் ஆங்கில சொல்லாற்றலும் ஆளுமைப் பண்புகளும் அரசியல் அவதானிகளின் கவனத்தை தேசிய மட்டத்தில் ஈர்க்கத் தொடங்கின.

1983ஆம் ஆண்டில் அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்தத்தின் விளைவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், மறைந்த தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோருடன் சம்பந்தனும் இணைந்திருந்த ‘மூவர் தலைமை’ இந்திய அரசின் தீர்வு நடவடிக்கைகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை 2001ஆம் ஆண்டில் இருந்து நாடாளுமன்றத்தில் அவர் நிதானத்துடன் வழி நடாத்தினார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ச்சியான அரசியல் ஆலோசனைகளிலும் அவர் பங்கெடுத்தார்.

சம்பந்தனின் மறைவு ஆழமான உணர்வுகளை தோற்றுவித்துள்ளது: ஶ்ரீகாந்தா | Sambandhan S Demise Evokes Deep Feelings Srikanta

போருக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் ஓர் இணக்கமான அரசியல் தீர்வுக்காக தொடர்ந்து அவர் பாடுபட்டார்.

ஆயினும், அவரின் முயற்சிகள் சிங்கள அரசியல் சக்திகளின் அதிகாரப் போட்டியில் அடிபட்டுப் போயின என்பது ஓர் வரலாற்றுச் சோகமாகும்.

சம்பந்தனைப் போன்ற ஓர் தமிழர் தலைவரின் காலத்தில் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காணத் தவறிய பாரிய வரலாற்றுத் தவறினை, எதிர்காலத்தில் சிங்கள அரசியல் தரப்புக்கள் நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்.

சம்பந்தன் அவர்களை பற்றிய உரியதோர் அரசியல் மதிப்பீடாகவும் அதுவே இருக்கும்" என குறிப்பிட்டுள்ளது. 

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு

கொட்டகலையில் ஜீவன் தொண்டமான் தலைமையில் விசேட சந்திப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US