முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க விசாரணைக்கு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இங்கிலாந்து பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி அவர் நாளையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில்; முன்னிலையாகவுள்ளார்.
தேசபந்து அளித்த வாக்குமூலம்
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் பயணத்துக்கான நிதியை ஜனாதிபதி செயலகமே ஒதுக்கியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சமன் ஏக்கநாயக்கவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை காலி முகத்திடலில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தத் தவறியது தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அளித்த வாக்குமூலம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
