தொலைபேசி சின்னத்துக்குப் பதில் மாற்றுச் சின்னம்! ஐக்கிய மக்கள் சக்திக்குள் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்துக்குப் பதில் மாற்றுச் சின்னமொன்றை பயன்படுத்துவது தொடர்பில் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
சரிவடையும் வாக்கு வங்கி..
கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது தொடக்கம், இதுவரை போட்டியிட்ட எந்தவொரு தேர்தலிலும் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.
அதற்குப் பதிலாக ஒவ்வொரு தேர்தலிலும் கட்சியின் வாக்கு எண்ணிக்கை குறைந்து கொண்டே போகின்றது. செல்வாக்கும் வீழ்ச்சியடைகின்றது என்று குறித்த முக்கியஸ்தர்கள் கட்சித் தலைமைக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடக்கம் கட்சிக்கு புதியதொரு சின்னம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.