வெளிநாட்டு பயணங்களில் 2024இல் பதிவான வரலாற்று நிகழ்வு!
இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக 2024ம் ஆண்டு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டில் தொழில் நிமித்தம், 312,836 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொழில் நிமித்தம்
அதில் 185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றுள்ளதாகவும் அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணிக்கை
அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள்(77,546) குவைத்துக்கும், 51,550 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் (UAE) சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
