உப்பு தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
எதிர்வரும் மார்ச் மாதம் முதல் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்படாது என ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் உப்பு அறுவடை தொடங்குவதால் தட்டுப்பாடு நிலைமை ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மழைப்பொழிவு குறைந்து வருவதால் உப்பு உற்பத்தி தற்போது வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் உப்பு நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
உப்பின் விலை
இதேவேளை, இந்த மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் டீ.கே.நந்தன திலக தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்தின் தலைவர் டி.கே. நந்தன திலகா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |