அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அழகுசாதனத் துறையில் உள்ள அனைத்து தயாரிப்புகள் மற்றும் பொருட்களையும் தரமான முறையில் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ராஜகிரிய ஆயுர்வேத தேசிய மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆயுர்வேத மருந்துகள் ஒழுங்குமுறை சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முறைப்பாடுகள்
அத்தோடு, ஆயுர்வேத துறையின் தரமான மற்றும் உயர்தர பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை எனவும் தற்போது அது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுர்வேத அழகுசாதனப் பொருட்கள் , ஆயுர்வேத மருந்துகளின் அனைத்து தயாரிப்புகள் மற்றும் உட்பொருட்களை ஒழுங்குபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அமைச்சர் புதிய உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |