மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவுள்ள சஜித் பிரேமதாச!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் தானே களமிறங்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் சிறுபான்மை பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல்
மீண்டுமொரு தேர்தலை எதிர்கொள்ளும் முன் பரந்துபட்ட எதிர்க்கட்சி கூட்டணியொன்றை அமைக்க வேண்டும் என பங்காளி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்குள் நிலவும் முறுகல்கள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது பரந்துபட்ட கூட்டணி அமைக்கப்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலேயே அமைக்கப்பட வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அது மாத்திரமன்றி மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும் தாமே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கப் போவதாகவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
இச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன், ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri