அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அரசின் நிலைப்பாடு அம்பலம்!
அரச ஊழிர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்படுவது தொடர்பில் வாக்குறுதி வழங்க முடியாது என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அமைச்சர் லால்காந்த உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்துரையாற்றிய அவர், ''இந்த மண்டபத்தில் பெண்கள் குறைவு,நான் ஒரு கணக்கெடுப்பு எடுத்தேன் ஆனால் தேவையில்லை என்று நினைத்தேன்.
அதிகரிக்கப்படும் சம்பளப் பணம்
பெண்களின் கண் புருவம் வடிவமைக்க இப்போது எவ்வளவு செலவாகிறது.கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்று அதிகரிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அதிகரிக்கப்படும் சம்பளப் பணம் அழகுப்படுத்தும் நிலையங்களுக்கு மதுபாசானைகளுக்கு செல்கிறது.
நாட்டில் பணப் புரள்வு நடைபெற வேண்டும்.அப்போது தான் பொருளாதாரம் உயர்வடையும்.ஆகையால் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.
தொழிற் சங்க நிகழ்வுகளில் உரையாற்றும் போது பயமாகத்தான் இருக்கிறது. இப்போது நான் அமைச்சராக இருக்கிறேன் ஆனால் எனது தொழிற்சங்க தலைமைப் பதவி மற்றும் அமைச்சு ஆகிய இரண்டையும் பாதுகாத்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது.''என தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருகைதந்த போது அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக கூறிய நிலையில் தற்போது சம்பள உயர்வு குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் அரச ஊழியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்




