13ஆவது திருத்தம் குறித்து வாய் கிழிய பேசும் தலைவர்கள் : சஜித் சாடல்
13ஆவது திருத்தம் குறித்து வாய் கிழிய பேசும் தலைவர்களால் மாகாண சபைத் தேர்தலைக் கூட முறையாக நடத்த முடியவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். (Jaffna) வடமராட்சி பாடசாலை ஒன்றிற்கு ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (10.07.2024) கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"மாகாண சபைத் தேர்தலைக் கூட நடத்த முடியாத தலைவர்கள் 13ஆவது திருத்தம் குறித்து எவ்வாறு பேசுவார்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் நல்லிணக்கம், சகோதரத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்புணர்ச்சி அவசியம் என்றபடியால், ஐக்கிய மக்கள் சக்தி அரசில் அடுத்த வருடம் முதல் காலாண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.
மாகாண சபைகள்
பல்வேறு தலைவர்கள் யாழ். மக்களை அரசியல் இசை நாற்காலி விளையாட்டுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வந்து வெவ்வேறு இடங்களில் பல்வேறு விடயங்களைச் செய்கின்றார்கள். 13ஆவது அரசமைப்புத் திருத்தம் என்பது விசித்திரமான ஒன்றல்ல, அது எமது நாட்டின் சட்டப் புத்தகத்தில் உள்ள விடயமொன்றாகும்.

யார் அது குறித்து என்ன கதை சொன்னாலும், 13ஆவது திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட அனைத்து மாகாண சபைகளும் தற்போது செயலிழந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி அரசில் முன்னைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும். தற்போது மாகாண சபைகள் இயங்காவிட்டாலும் மாகாண சபைத் தவிசாளருக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது.
எனவே, பெயருக்கு மாகாண சபைகள் இருந்தாலும், மக்கள் பிரதிநிதிகள் மூலம் மக்களுக்கு ஆற்றப்பட வேண்டிய சேவைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியிலான ஏற்பாடுகளையும் செய்து, மாகாண சபைக் கட்டமைப்பின் ஊடாக சேவையை நாடும் அனைவருக்கும் நீதி நியாயத்தை பெற்றுத் தருவோம்.
ஸ்மார்ட் கல்வி நடவடிக்கை
எமது நாட்டுக்கு அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதன் மூலம் ஸ்மார்ட் நாடு உருவாக்கப்பட வேண்டும். இதற்கு ஸ்மார்ட் கல்வி நடவடிக்கை அவசியமாகும்.

இங்கு பொரும்பான்மை மொழி மட்டும், தமிழ் மட்டும் என கூறிக்கொண்டு இருக்காமல், ஆங்கில மொழி மற்றும் கணினி தகவல் தொழில்நுட்ப கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
உலகின் சர்வதேச தொழிலாளர் சந்தையின் தேவைக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் வகுக்கப்பட வேண்டும். அத்துடன், யாழ். மாவட்டத்தையும் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளையும் அறிவின் மையங்களாக மாற்றுவது யதார்த்தமாக்கப்படும்” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri