ரணில் தொடர்பில் பொதுஜன பெரமுனவினரின் தீர்மானம்! பொது வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil Wickremesinghe) உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றையதினம்(09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே தீர்வு காண முடியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே தீர்வு காண முடியும் என பொதுமக்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு பொதுஜன பெரமுன எடுத்த தீர்மானம் சிறந்தது.
பொருளாதார ரீதியில் அடைந்துள்ள தற்காலிக ஸ்திரத்தன்மையை நிலையானதாக உறுதிப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும். நெருக்கடியான சூழலில் தான் தலைவர்கள் தோற்றம் பெறுவார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறந்த அரச தலைவர் என்பது 2022 ஆம் ஆண்டு நெருக்கடியின் போது வெளிப்பட்டது.
நெருக்கடிகளை கண்டு தப்பிச் சென்ற அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பேச்சுக்கள் கேட்பதற்கு மாத்திரம் சிறந்ததாக இருக்கும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதை அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களில் ஒருசிலர் செயற்படுவது முறையற்றது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |