அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயற்சிக்கின்றது
அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஜனநாயக முறையான நியமனங்கள்
தேசிய மக்கள் சக்தியா அரசாங்கமானது அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் நகர்வுகளை முன்னெடுப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் ஓர் பகுதியாகவே இளைஞர் மன்றங்கள் முதல் சிவில் பாதுகாப்பு கமிட்டி வரையில் ஜனநாயக முறையில் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நீதிமன்றங்களின் சுயாதீன தன்மையை சிவைடையச் செய்வதற்கும் முயற்சிப்பதாக சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
உண்மையில் 22 ம் திருத்தச் சட்டமூலமானது தனி கட்சி ஆட்சி முறை ஒன்றை முன்னெடுக்கும் உள்நோக்கத்தை கொண்டதாக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.