இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்..

Sri Lankan Tamils Tamils Mullivaikal Remembrance Day Death
By Thiva Aug 30, 2026 12:29 PM GMT
Report

ஒரு பௌத்தனே இலங்கை அரசின் தலைவனாக இருக்க வேண்டும் என்பது இலங்கை அரசியல் சாசனத்தில் வரையப்படவில்லைத்தான். ஆயினும் ஒரு பௌத்தம் மட்டுமே இலங்கை சிம்மாசனத்தில் அமர முடியும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது.

ஆயினும் இலங்கை அரசியலில் 12ம் நூற்றாண்டில் ஒரு பௌத்தன் மாத்திரமே சிம்மாசனத்தில் அமரமுடியும் என்பதை சட்டமாக்கி கல்வெட்டாக பொறிக்கப்பட்டும் விட்டது.

தமிழினப் படுகொலை

அது நவீன அரசியல் சாசனத்தில் எழுதப்படவில்லை ஆயினும் பௌத்த மகா சங்கத்தின் ஊடாகவும், பௌத்த தர்மத்தின் ஊடாகவும் சிங்கள பௌத்தர்களின் சமூகச் சட்டமாக நிலைபெற்றுவிட்டது.

அதுவே இன்றைய தமிழினப் படுகொலைக்கு காரணமாகவும் இருப்பதோடு அரசின் தலைவர்களே அதன் அச்சாணியாகவும், யார் எத்தகைய நல்மனம் கொண்டவராக இருப்பினும் இலங்கை சிம்மாசனத்தில் அமர்ந்தாதும் அவர்கள் இனப்படுகொலையின் பங்குதாரராகவும், அதனை வழிநடத்திச் செல்பவராகவுமே செயலாற்ற முடியும்.

இந்தப் பின்னணியை ஆழமாக வரலாற்று உணர்வோடும், வரலாற்றுப் போக்கிலும், வரலாற்று தத்துவவியல், மற்றும் சமூகவியல் மனப்பாங்கு ஆகிய முறைகளுக்குள்ளால் ஆராய்கின்றபோது இலங்கை அரசியலில் பௌத்தத்தின் செல்வாக்கினால் இனக்குரோதம் எத்தகைய ஆழமான தாக்கத்தை செலுத்துகிறது என்பதை உணர முடியும்.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் பௌத்தன் அல்லாத யாரும் பிரதமமந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ இலங்கை அரசுத் தலைவராக அமரவில்லை. அமரவும் முடியாது.

இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. | Sinhala Buddhist Leaderships Designed Genocide

சிங்கள அரசியல் தலைவர்களை வரிசைப்படுத்தி பார்க்கின்றபோது ஆச்சரியமான அரசியல் அதிகார அவாவின் உச்சங்களை காணமுடியும்.

அந்த அரசியல் அதிகார அவாவின் நிமித்தம் மதம் மாறியவர்களையும் காணமுடியும், மதத்தின் பெயரால் அவர்கள் மேற்கொண்ட அயோக்கியத்தனங்களையும் காணமுடியும், பார்வைக்கு பௌத்தனாகவும் சொந்த வாழ்க்கை முறையால் கிறிஸ்தவனாகவும், மேற்கத்திய கலாச்சாரத்தை வரித்துக் கொண்டவர்களாகவும் இருப்பதைக் காணமுடியும்.

அரசியல் அதிகாரத்திற்காக பௌத்தராகவும், சிங்களவனாகவும், தமிழினம் எதிர்பாளனாகவும், இந்திய எதிர்பாளராகவும் தம்மை காட்டிக் கொண்டவர்களை காணமுடியும்.

அதே நேரத்தில் இந்திய எதிர்ப்பை காட்டியவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் குடும்ப உறவை அன்னியோன்னியமாக பேணியதையும் காணமுடியும்.

இந்த வகையிலானதம் அனம் சார்ந்த போக்கு முற்றிலும் மாறான போக்கே தமிழ் அரசியல் தலைவர்களிடம் உண்டு.

சிங்கள பௌத்த தலைமைகள்

பெயரால் தமிழனாக வாழ்ந்து கொண்டு சிங்கள தேசத்தில் சிங்களவனாகவும், மேற்குலக கலாச்சாரத்தையே வாழ்க்கை முறையாக கொண்டவர்களாகவும், தேர்தலுக்கு வரும்போது வேட்டி சட்டை போட்டவர்களாகவும், அதே நேரத்தில் கிறிஸ்தவனாக வாழ்ந்து கொண்டு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, சிங்கள தேசத்தில் ஆதரவையும் பெற்றுக் கொண்டு, தனது மரணக்கிரியை தமிழ் சைவம் முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று முன்கூட்டியே கூறிய எஸ்.ஜே.வி செல்வநாயகத்தையும் அரசியல் தலைவராக நாம் கொண்டாடியிருக்கிறோம்.

இப்போதும் தமிழின அரசியல் பேசிக் கொண்டு வாழ்க்கை முறையால் சிங்கள தேசத்தில் வாழ்ந்து சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் திளைத்து, வீட்டில் தனது வாரிசுகளை சிங்கள பௌத்தத்தில் கலந்துவிட்டவர்களையும் தலைவராக ஏற்று அரசியல் தற்கொலை செய்ய இப்போதும் மானங்கெட்ட தமிழர்கள் தயாரகின்றனர். அதுவும் முடஇடாள்கள் கோளோச்சும் அன்னைய காலத்தில் நடந்தே தீரும்.

“கொடுகுடி செற்கேளா“ என முனுமுனுத்து மனதை ஆற்றுப்படுத்திக்கொள்வோம். இங்கே தென் இலங்கையின் சிங்கள பௌத்த அரசியலில் அரசியல் தலைவர்கள் எம் மதத்திற்கு போனாலென்ன? எந்த கலாச்சாரத்தை பின்பற்றினால் என்ன?, அவர்கள் மகாவம்சத்தின் தம்மதீபக் கோட்பாட்டை கைவிட்டதுகிடையாது.

அதனை மேலும் மேலும் பலப்படுத்தி அந்தக் கோட்பாட்டின் இலட்சியத்தை அடைவதற்கான அனைத்து வகையான அரசியல் முன்னெடுப்புக்களையும் தமது அரசியல் வாழ்க்கைக்காலம் முழுவதிலும் முன்னெடுத்து இருக்கிறார்கள் என்பது சிங்கள மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் பற்றி பெருமிதம் அடையக்கூடிய வரலாற்றுத் பெருமைதான்.

எந்தச் சிங்களத் தலைவர்களும் சிங்கள பௌத்தத்திற்கு தீங்கிழைக்கக்கூடிய எந்த ஒரு அரசியல் முடிவையோ, செயற்பாட்டையோ எந்தச் சந்தர்ப்பத்திலும் முன்னெடுக்கவில்லை.

இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. | Sinhala Buddhist Leaderships Designed Genocide

இலங்கையின் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்ட சோமநாமதேரர் என்ற பௌத்த துறவி தனக்கு மரணதண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் கிறிஸ்தவனாக மாறி பீட்டர் என்ற பெயருடன் தூக்கு கைக்கில் தொங்கி மரணித்தார்.

அவர் மரணத்திலும் கூட தான் பின்பற்றிய பௌத்த மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படக் கூடாது என்பதில் திடமாக இருந்துள்ளார் என்பதை தமிழ் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை சிங்களத் தலைவர்களின் பரம்பரையினர் காலனிய ஆட்சிக்காலத்தில் அரச பதவி அதிகாரங்களை பெறுவதற்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி பதவிகளை பெற்றுனார்.

அவர்கள் பௌத்தத்தின் வளர்ச்சிக்கும் சிங்கள மொழி வளர்ச்சிக்கும் பெரும்பணியாற்றினர். அவர்களின் வரிசுகள்தான் சுதந்திரத்திற்கு பின்னர் அரசியல் அதிகார பதவிகளை பெறுவதற்காக மீண்டும் பௌத்தர்களாக மாறி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள் அல்லது பெற்றுக்கொண்டார்கள்.

இத்தகைய அரசியல் அதிகார அவா என்பது 12ம் நூற்றாண்டில் நிசங்கமல்லன் மன்னன் கையாண்ட political philosophical strategic ன் அரசியல் அதிகார தன்முனைப்புக்களின் ஒரு சுவாரசியமான வரலாற்றுத் தொடர்ச்சிதான்.

சிங்களத் தலைவர்களின் செயற்பாடுகள் உண்மையில் நிசங்கமல்லனின் அதிகார-அரசியல் கோட்பாட்டு மூலோபாயத்தின்(Power-political theoretical strategy) தொடர்ச்சி” என்பதை நிரூபிப்பதாகவே சிங்களத் தலைவர்களின் வாழ்க்கை முறையும் அரசியல் முன்னெடுப்புக்களும் உள்ளன.

இலங்கையின் சிம்மாசனத்தில் ஒரு பௌத்தன் மாத்திரமே அமர வேண்டும் என்ற எழுதப்பட்ட சட்டம் எப்போது ஆரம்பம் ஆகிறது என்றால் இப்போது நமக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் பொல்லனார்வை ராஜதானியில் கி.பி 1187-1196 ல் நிசங்கமல்லனின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட பொலநறுவை வடக்கு வாயில் கல்வெட்டு (North Gate Slab Inscription), மற்றும் கல்பொத்த (Gal Pota) கல்வெட்டு ஆகியவை இரண்டும் அவரது அரசுரிமை, பௌத்தம், வம்ச உரிமை ஆகியவற்றை இணைத்துக் காட்டுகின்றன.

 ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம்

1. “பௌத்தனே அரசனாக வேண்டும்”என்பதை வடக்கு வாயில் கல்வெட்டில், சோழர், கேரளர் முதலிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தரல்லாத இளவரசர்களை இலங்கை அரியணையில் அமர்த்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அதே கல்வெட்டு, அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அரச பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே, “இலங்கையை ஆளுபவன் பௌத்தனாக இருக்க வேண்டும்” என்ற கருத்து நேரடிக் கல்வெட்டு ஆதாரமாகிறது.

2. “தர்மத்தைப் பாதுகாப்பது அரசனின் கடமை”என்பதை நிசங்கமல்லனின் ஹதாதகே (Hatadage) கல்வெட்டு அதன் தொடக்கத்திலேயே“This Dhamma … should always be preserved.” என்று பௌத்த தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இங்கு “பௌத்தனே அரசனாக வேண்டும்“ என்பதம் “அரசன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்“ என்ற அரசியல்–மதக் கருத்து வெறும் பின்னாளில் உருவாக்கப்பட்ட விளக்கம் அல்ல அது நிசங்கமல்லனின் கல்வெட்டு மரபிலேயே உள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கத்தக்கது.

இவை இரண்டும் ஒரே அரசியல் அதிகார அமைப்பியலாக இணைக்கப்படுகின்றமை நிசங்கமல்லனின் political philosophy மற்றும் power politics கருத்தியல் வலுவடைகிறது தொடர்வதை காட்டுகிறது. நிசங்கமல்லனின் கல்வெட்டுகளில் மூன்று கருத்துகள் ஒன்றோடொன்று இணைகின்றன.

இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. | Sinhala Buddhist Leaderships Designed Genocide

(1)யாருக்கு இலங்கை அரியணையில் உரிமை? (2) பௌத்தரல்லாத சோழ/கேரள ஆட்சியாளர்கள் அரசனாகக் கூடாது. (3) அரசனின் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பது முக்கியமானது. மேலும் கல்பொத்த கல்வெட்டில் நிசங்கமல்லன் தனது வம்ச உரிமையை விஜயன் மற்றும் கலிங்க வம்சத்துடன் இணைத்துக் காட்டுகிறார். அதே கல்வெட்டில் தர்மத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

எனவே அவரது அரசியல் தர்க்கமானது கலிங்க வம்ச உரிமை என்பது பௌத்த அரசுரிமை, புத்த சாசனப் பாதுகாப்பு என்பவற்றால் இலங்கையின் அரியணைக்கான அரசியல் சட்டபூர்வத்தன்மை(legitimacy) வலியுறுத்துவதாக அமைந்த பௌத்தத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைக்கொள்ளும் கல்வெட்டு ஆதாரமாகும்.

முன்கூறிய நிசங்கமல்லனின் “strategic move” எப்படி தொடர்புபடுகிறது என்றால் அதற்கான ஒரு முக்கியமான ஆதாரமாக இந்திய அரசாங்கத்தின் Indira Gandhi National Centre for the Arts (IGNCA) வெளியிட்ட நிசங்கமல்லனின் இராமேஸ்வரம் கல்வெட்டு ஆய்வு அவரது கல்வெட்டுகளின் புகழுரைகள் வெறும் அரசனைப் புகழ்வதற்காக மட்டும் அல்லாமல், “Kalinga dynasty” இலங்கை ஆட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் பிரச்சாரமாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

இதுவும் ஏற்கனவே குறிப்பிட்டநிசங்கமல்லனின் power politics / strategic legitimacy கோட்பாட்டிற்கான இன்னுமொர் வலுவான ஆதாரம்.

நிசங்கமல்லனின் கல்வெட்டுகள், இலங்கை அரியணை பௌத்த அரசரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அரசனின் முக்கியக் கடமைகளில் புத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் அடங்கும் என்றும் காட்டுகின்றன;

அதேவேளை, கலிங்க வம்சத்தின் இலங்கை அரசுரிமையையும் அவர் வலியுறுத்துகிறார் “அரசன் என்பவன் பௌத்த சாசனத்தின் பாதுகாவலன்” என்ற அரசியல் கோட்பாடு இன்றைய இலங்கை சிங்கள பௌத்த இனவாத அரசியலின் கட்டமைக்கட்ட இனப்படுகொலை அரசியல் செயல்முறைக்கு அத்திவாரம் இடப்பட்டுவிட்டது என்பதும், அதுவே கட்டமைக்கப்பட்ட தமிழின இனப்படுகொலையாக வளர்ச்சி அடைந்துள்ளது என்ற உண்மையும் புரியும்.

நிசங்கமல்லன் தன்னை ஒரு தீவிர பௌத்தனாக காட்டியதே தனது அரசியல் அதிகார நலன்களின் அடிப்படையில்த்தான்.

அந்த அரசியல் அதிகார நலன் என்பது இலங்கை அரசாட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், அந்த ஆதிகாரத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்குமான அரசியல் தத்துவார்த்த மூலோபாயம் வியூகம் (political philosophy strategic move).

இதனை புரியாமல் மேலெழுந்தவாரியாக நிசங்கமல்லனின் பௌத்த மதப் படிமத்தை வெறும் “தீவிர பௌத்தமதப் பக்தி” என்று எடுத்துக்கொள்வது அவரது அரசியல் அதிகார நலன் உத்தியை மறைத்துவிடுவதாகவே அமையும்.

அவர் பௌத்தத்தை தனது அரசியல் அதிகார அடைதலுக்கான கருவியாக பயன்படுத்தினார்.

ஆனால் அவர் காலவோட்டத்தில் பௌத்தத்திற்குள் அமிழ்ந்துபோனார். அந்த அரசியல் போக்கிற்கு அமைவாகவே காலணி ஆட்சியின் முடிவுக்கு பின்னான சுதந்திர இலங்கையின் அனைத்து பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட சமய அடையாளம், மற்றும் அவர்களின் பரம்பரையினர் சில நூற்றாண்டுகளின் முன்னர்தான் இலங்கைத்தீவில் குறியேறினர் என்பதையும் துல்லியமாக நிரூபிக்க முடியும்.

குறிப்பாக சேனநாயக்கா, கொத்தலாவல, ஜெயயவர்த்தனா, பண்டாரநாயக்கா, ரணில் விக்ரமசிங்க, ரஜபக்சேக்கள் போன்ற தலைவர்களின் மத அடையாளம், குடும்பப் பின்னணி, அரசியல் அடையாளம் ஆகியவை ஒத்த தன்மையுடையவை என்ற கட்டமைப்பு ரீதியான வாதம்(structural argument) மிகவும் சுவாரசியமானதும் ஆச்சரியமானதுமான உண்மைதான்.

 அரசியல் அதிகார பதவி

ஆயினும் இந்த ஒத்த முறைமைக்குள் பலரும் புரிந்து கொள்ள முடியாத அரசியல் தத்துவார்த்த (political philosophy) உண்மைகள் பொதிந்துள்ளது என்பதுதான் இங்கே முக்கியமானது.

காலனித்துவத்திற்கு முந்தைய தேவநம்பிய தீசன் ஆட்சிக் காலத்தில் இருந்து சிங்கள இராச்சியத்தில் அரச அதிகாரத்தின் சட்டபூர்வத்தன்மைக்கு(legitimacy) பௌத்தம் முக்கிய ஆதாரமாக இருந்தது.

பின்னர் ஐரோப்பிய காலனித்துவ காலத்தில் உயர்கல்வியையும், அரசியல் அதிகாரத்தைப் பெறவும் கிறிஸ்த்தவராக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டபோது உயர்குழத்து குடும்பங்கள் கிறிஸ்தவமயமாகி அரசியல் அதிகார பதவி, பட்டங்களை பெற்றன.

அதே உயர்குழம் சுதந்திரத்திற்குப் பின்னர் அரசியல் சட்டபூர்வத்தன்மை மீண்டும் பௌத்த மதத்திற்கு மாறி பௌத்த அடையாளத்துடன் இணைந்து அதிகார பீடத்தில் அமர்ந்தனர். இந்த மாற்றத்தை வரலாற்று ரீதியாக ஆராய்வதும் அறிவதும் விடுலைக்காக அதாவது அரசியல் அதிகாரத்தை மீட்கப்போராடும் ஈழத்தமிழர்களுக்கு நிச்சயமாக பயனுள்தாக அமையும்.

இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. | Sinhala Buddhist Leaderships Designed Genocide

12ம் நூற்றாண்டின் நிசங்கமல்லனுடைய அரசியல் போக்குத்தான் காலனித்துவ காலத்தில் அரசியல் அதிகார அவா குணாம்சத்திலோ, அதிகார கையிருப்பிலோ வர்க்க அடிப்படையிலோ மறவில்லை. கற்புல அடையாள மாற்றம் அதவது பௌத்தத்திற்கு பதிலாக கிறிஸ்தவ அடையாளம் மட்டுமே மறியது் இதனை மஞ்சல் அடை அணிந்தவர் வெள்ளை ஆடை அணிந்ததான தோற்றப்பாட்டு மாற்றமேயன்றி ஆள் மற்றமல்ல என்பதே உண்மையாகும்.

போர்த்துக்கேயர், டச்சுக்கார்ர், பிரித்தானியர் என்ற காலனித்துவ அரசுகள் பாரம்பரிய இலங்கை அரச அதிகார அமைப்பை உடைத்து அதிகார மையம்தை தாம் எடுத்திக்கொண்டாலும் மக்கள் மீது அரகார்ப் பிரயோக்கத்தை காலணித்துவத்தின் பெயரால் பழையா அதிகாரவர்க்கமே பிரயோகித்தது.

இதற்காகவே புதிய கல்வி, நிர்வாகம், சட்டம், நில உரிமை, வணிகம் ஆகியவற்றின் மூலம் ஒரு புதிய மேற்கத்திய கல்வியறிவு பெற்ற, கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவ உயர்குடியாக அவர்களே உருவானார்கள். அவர்களின் குடும்பங்கள் காலனித்துவ நிர்வாகத்தில் உயர்ந்த பதவிகளைப் பெற்றனர்.

இது “அரசியல் அதிகாரத்திற்காக மதமாற்றம்” என்ற ஒரு சாத்தியமான தந்திர விளக்கத்தைக் கொண்டிருக்கிறது.

பின்னர் 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து பௌத்த மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் பௌத்த அடையாளம் மீண்டும் அரசியல் மற்றும் தேசிய அடையாளத்தின் முக்கிய கூறாகியது.

 தமிழ் அரசியல் பரப்பு

இதுதான் சிங்களவர்களின் அதிகார அவா மிகவும் வலுவடைந்து கட்டமைப்பு ரீதியான இணைப்புத்(structural parallel) தன்மை வெளிப்படுத்துகிறது. சிங்கள மன்னர்கள் காலத்தில் பௌத்தம் -அரச அதிகார சட்டபூர்வத்தன்மை (legitimacy) என்று இருந்த நிர்பந்தம் காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம்/மேற்கத்திய கல்வி - காலனித்துவ அதிகார பதவி நுழைவு என்ற வழியே பின்பற்றப்படுகிறது.

இதன் தொடர்ச்சி இலங்கை சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமான கலத்தில் பௌத்த மறுமலர்ச்சி - பௌத்த சிங்களத் தேசிய அரசியல் சட்டபூர்வத்தன்மை மறுவடிவம் பெறுகிறது.

இதை “நிசங்கமல்லனின் மூலோயம் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும் இடையறாது தொடர்ந்தது” என்று கூறுவது நிசங்கமல்லன் காலத்தில் தெளிவாகக் காணப்படும் அரச அதிகாரத்தையும் பௌத்த சட்டபூர்வத்தன்மையையும் இணைக்கும் அரசியல் கருத்து, பின்னாளில் உறங்குநிலையிலிருந்து முற்றிலும் அதே வடிவில் இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் கலாச்சாரத்தில் மீண்டும் வலுப்பெற்று நிறுவன அமைப்பு முறையாக(institutional pattern) நிலைத்தது விட்டது.

இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. | Sinhala Buddhist Leaderships Designed Genocide

அரசியல் மேடையில் ஆடை மாற்ற வேறுபாடே அன்றி ஆனால் ஆட்டம் பழையதே. காலனித்துவ காலத்தில் கிறிஸ்தவம் ஏற்றுக்கொண்ட இலங்கை உயர்குடும்பங்களின் வாரிசுகள் சுதந்திரத்திற்குப் பின்னர் பௌத்தர்களாக மாறியது என்ற கூற்றையும் குடும்பம் குடும்பமாக ஆதாரத்துடன் ஆராய்ந்தால் உண்மை பட்டவர்த்தனமாக தெரியவரும்.

நிசங்கமல்லன் வெளிப்படுத்திய “பௌத்தமதம் + அரச அதிகார சட்டபூர்வத் தன்மை + தீவின் அரச இறைமை” என்ற அரசியல் வடிவம், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் நீண்டகால நிறுவனமயமான நினைவுகளாக(institutional memory) நிலைத்துள்ளது. காலனித்துவ காலத்தில் அது தற்காலிகமாக சவாலுக்கு உட்பட்டாலும், பௌத்த மறுமலர்ச்சி மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய பெரும்பான்மை அரசியலின் வழியாக புதிய வடிவில் மீண்டும் அரசியல் சட்டபூர்வ தன்மையின் முக்கிய ஆதாரமாகியது.

இதுதான் சிங்கள பௌத்த அரசியல் தத்துவார்த்த நடைமுறையாக உருப்பெற்றிருக்கும் மிகவும் வலுவான வடிவம். ஆனால் தமிழ் அரசியல் பரப்பில் தாம் பின்பற்றிய மதத்திற்கும், தன்னை பின்தொடர்ந்த மக்களுக்கும் உண்மையா நடக்காத, விசுவாசம் இல்லாதவர்களை தலைவனாக ஏற்ற தமிழ் மக்கள் இப்போது வெட்கி தலை குனிகின்றனர்.

“தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்“ என்ற தலைவர்களுக்கு நாம் “தந்தை“ எனபட்டம் சூட்டியிருக்கிறோம்.

எதையுமே தத்துவார்த்த அணுகுமுறைக்கூடாக பார்க்காமல் வெறும் கட்புலப் பார்வைக்கூடாக பார்த்து வீட்டில் பூச்சிகளாக பறந்து நெருப்பில் விழுந்து அழிந்து கொண்டிருக்கும் தமிழினம் தன்னை சுய பரிசீலனை செய்து அவசியம்.

தமது கடந்தகால தலைமைகளின் தலைமைத்துவ ஆளுமையை பகுப்பாய்வு செய்வதன் மூலமே ஆளுமை மிக்க புதிய தலைமைத்துவ உருவாக்கத்திற்கான அகப் புறச் சூழலை தமிழ அரசியல் பரப்பில் ஏற்படுத்த முடியும் அதுவே நமக்கு உடனடி தேவையாகவும் உள்ளது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thiva அவரால் எழுதப்பட்டு, 30 August, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US