இலங்கையில் அதிகரிக்க போகிறதா மின் கட்டணங்கள்..! வெளிவந்துள்ள தகவல்
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் போதுமான மழை பெய்யாவிட்டால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறைக்கப்பட்ட நீர்மின் உற்பத்தி மற்றும் பிற மின் ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலையை அதிகரித்து, மின்சார உற்பத்திச் செலவுகளைக் கூட்டக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண உயர்வால் பாதிப்பு
கூடுதலாக விதிக்கப்படும் எந்தவொரு கட்டண உயர்வும் பொதுமக்களையும், சுற்றுலாத்துறையையும் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இலங்கையில் எல் நினோ தாக்கத்தால் வறண்ட வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இது நாட்டின் பல மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை, விவசாய பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் அக்டோபர் முதல் இரண்டாவது இடைப்பருவ மழைக்காலத்தில் சாதாரண அளவை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15