ஹோர்முஸ் நீரிணையில் சவூதி அரேபியாவின் இரு பிரம்மாண்டக் கப்பல்கள் மீது தாக்குதல்
ஹோர்முஸ் நீரிணை வழியே சவூதி அரேபியாவின் மசகு எண்ணெயைச் சுமந்து சென்ற இரு பிரம்மாண்டக் கப்பல்கள் மீது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கடல்சார் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஓமான் கடற்பரப்பு எல்லைக்கு அருகில் அடுத்தடுத்து சில நிமிட வேறுபாட்டில் இடம்பெற்ற இத்தாக்குதல்களில் சவூதி அரேபியக் கொடியுடனும் லைபீரியக் கொடியுடனும் பயணித்த இரு கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
தலா 20 மில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெயை ஏற்றிச் சென்ற இக்கப்பல்களில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் மோதல் நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஓமான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் முன்னெடுத்து வரும் சமரச பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.

இப்புதிய தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மேலதிகத் தாக்குதல் எச்சரிக்கைகள் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மேலும் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் - பரபரப்பை ஏற்படுத்திய புதிய நகர்வு