அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம்! தன்னுடன் இருக்கும் நபரால் தயக்கம் காட்டும் அநுர
மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜூன் மகேந்திரனின் சர்ச்சைக்குரிய வாக்குமூலம் ஒன்றின் காரணமாகவே அவரை நாட்டிற்கு அழைத்து வராமல் அநுர தரப்பு தயக்கம் காட்டுவதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(31.08.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திருடர்களை கைது செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அரசியல் நாடகத்திற்காக அதனை செய்வதையே நாங்கள் எதிர்க்கின்றோம்.
தயங்கும் அநுர
திருடர்களை கைது செய்வது போல, நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்தவர்களுக்கு எதிராகவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதாக இந்த அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், தற்போது அர்ஜூன் மகேந்திரன் அவருடைய பெயரை அலெக்ஸாண்டர் என மாற்றிக் கொண்டிருப்பதால் அவரை நாட்டுக்கு அழைத்து வருவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் இருந்து நாட்டுக்குக் கொண்டுவருவதற்கு சிங்கப்பூரில் எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை. அர்ஜூன் மகேந்திரனை அழைத்து வர முடியாது என அரசாங்கம் கூறுவதில் எவ்வித உண்மைத்தன்மையும் கிடையாது.

மாறாக, பிணைமுறி கணக்கை அதிகரிப்பதற்கு தனக்கு யாரால், எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து அர்ஜூன் மகேந்திரன் உறுதியான சாட்சியம் ஒன்றை வழங்கியிருந்தார்.
அர்ஜூன் மகேந்திரன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய நபர் தற்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடனேயே இருக்கின்றார். இதன் காரணமாகவே, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. சாதனை படைத்த நிவின் பாலி Cineulagam