தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு நெதர்லாந்தில் திருயாத்திரை
தூய கன்னிமரியாளின் பிறப்பு விழாவை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம் முன்னெடுக்கும் 24ஆவது ஆண்டு தமிழர் திருயாத்திரை, நெதர்லாந்தில் அமைந்துளள சிறிய லூர்து அன்னை திருத்தலத்தை நோக்கி நடைபெறவுள்ளது.
இந்தப் புனித யாத்திரையானது எதிர்வரும் (06.09.2026)ஆம் திகதி அன்று இடம்பெறவுள்ளது.
யாத்திரை தொடர்பான விபரம்
குறித்த திருத்தலத்தின் முகவரி்: Kloosterstraat 1, 5865 AA Tienray, Netherlands

நிகழ்ச்சி நிரல்: காலை 11.00 மணிக்கு திருநாள் திருப்பலி
: தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம்
: அதனைத் தொடர்ந்து அன்னையின் திருசொரூப பவனி
: சிறிய லூர்து கெபியில் இறுதி ஆசியுடன் விழா நிறைவு
இந்தத் திருயாத்திரையில் அனைவரும் கலந்துகொண்டு இறை அருளைப் பெற்று, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கப்படுகின்றனர்.


