மோடிக்கு சஜித் கொடுத்த சிறப்புப் பரிசின் பின்னணி
நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பின் போது சஜித் பிரேமதாச நரேந்திர மோடிக்கு சிறுத்தையின் புகைப்படம் தாங்கிய நினைவுப் பரிசு ஒன்றினை அன்பளிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில், அன்பளிப்பு செய்த புகைப்படத்தின் பின்னணி குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் சஜித் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக
அதில் ”வில்பத்து தேசிய பூங்காவில் ஒரு கண் பார்வை இழந்த eye - one என அழைக்கப்படும் பெண் சிறுத்தையின் இந்த சிறப்பு புகைப்படத்தை, நேற்று (05) இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொழும்பில் வழங்கியது பெரும் கௌரவமாகும்.
ஒரு கண் பார்வை இழந்திருந்தாலும், காட்டின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழும் இந்த சிறப்பான விலங்கு இலங்கையின் இயற்கை பாரம்பரியம் மற்றும் அழகின் உண்மையான சின்னமாகும்.
It was an honour to present this powerful image of a one-eyed female leopard from Wilpattu National Park to His Excellency @narendramodi, Prime Minister of India, on 5th April 2025, along with my warmest wishes.
— Sajith Premadasa (@sajithpremadasa) April 6, 2025
This extraordinary leopard, who had lost sight in one eye —… pic.twitter.com/GIdGcSpoY5
அதன் கவர்ச்சிகரமான நீல கண் சவால்களை எதிர்கொண்டு அதன் வாழ்க்கை பற்றிய நீண்ட கதையை சொல்கிறது.
இது காட்டில் பாதுகாப்பாக உறுதியாக இருப்பது விலங்குலகின் சவால்களை வெற்றி கொள்வதற்கான சின்னமாகும்.
எவ்வாறாயினும், துரதிஷ்டவசமாக இந்த சிறப்பு விலங்கு கடந்த சில ஆண்டுகளாக காணப்படவில்லை, மேலும் அது உயிருடன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |