இன்று அநுராதபுரத்திற்கு செல்லும் இந்திய பிரதமர்! பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அநுராதபுரத்திற்குச் செல்லவுள்ளார்.
இதன்போது, இந்திய பிரதமர், அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதி விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு அநுராதபுர நகரைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாற்று வீதி
இந்தநிலையில், அநுராதபுரத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இன்று காலை 8.30 முதல் 11 மணி வரை அநுராதபுர நகர், ஜய ஸ்ரீ மகா போதி மற்றும் தொடருந்து நிலையத்தை அண்மித்த பிரதான வீதிகள் இடைக்கிடையே மூடப்படும் என பொலிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான வரவேற்பு நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றது.
இதனால் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து ஏற்பாடுகளால் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
