அரசைக் கவிழ்க்க சஜித் எடுக்கும் முயற்சி தோல்வி! மக்களின் ஆணை இருக்கும் வரை பதவியில் நீடிப்போம் - ருவான் ரணசிங்க

Sajith Premadasa Sri Lankan political crisis Prisons in Sri Lanka Ruwan Ranasinghe
By Rakesh Jul 17, 2026 06:54 AM GMT
Report

பாதாள உலகக் குழுக்களையும் திட்டமிட்ட குற்றச் செயல்களையும் ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதற்கு ஆதரவு வழங்காது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தற்செயலானவை அல்ல. அவை திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்டவை. தற்போது வீதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்துவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரியின் மரணம் - பின்னணி குறித்து வெளியான தகவல்

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய உயர் பொலிஸ் அதிகாரியின் மரணம் - பின்னணி குறித்து வெளியான தகவல்

சிறைக்குள் இருந்து சதித்திட்டம்

சட்ட நடவடிக்கை எடுக்கும்போது பாதாள உலகக் குழுவினர் சிறைக்குள் இருந்து சதித்திட்டங்களைத் தீட்டுகின்றனர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி, புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசின் நடவடிக்கைகளைத் தடுத்துவிடலாம் என அவர்கள் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.

நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இவ்வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பற்ற முறையில் செயற்படுகின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஊடகங்களில் பேசுவதற்கு வாய்ப்புத் தேடுவதிலும் மட்டுமே கவனம் செலுத்துகின்றார்.

அரசைக் கவிழ்க்க சஜித் எடுக்கும் முயற்சி தோல்வி! மக்களின் ஆணை இருக்கும் வரை பதவியில் நீடிப்போம் - ருவான் ரணசிங்க | Sajith S Attempt To Overthrow The Government Fails

அரசு பதவி விலக வேண்டும் என அவர் கூச்சலிடுவது, தங்களின் போதைப்பொருள் வலை அமைப்புகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களுடனான தொடர்புகள், இலஞ்சம், கொலைகள் தொடர்பான உண்மைகள் வெளிவரும்போது தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்வதற்கான முயற்சியாகும்.

தங்களின் திருட்டை மறைக்கவே அவர் இவ்வாறு செயற்படுகின்றார். நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை நாம் பெற்றுள்ளோம்.

பொதுமக்கள் எப்போது நாங்கள் செய்தது போதும் என்று சொல்கின்றார்களோ, அன்றுதான் நாங்கள் பதவியிலிருந்து விலகுவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களுக்காக அரசு வீட்டுக்குப் போகத் தயாரில்லை  என குறிப்பிட்டுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இரகசிய குழுவில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன! திடுக்கிடும் பல தகவல்கள் கசிவு..

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

ராஜபக்சர்களுடன் மிகவும் நெருக்கமான முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்மமான முறையில் மரணம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US