முதுகெலும்பை நேராக நிமிர்த்தி தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு சவால் விடுத்த சஜித்
சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள் என பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (09.06.2023) பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச் 19ஆம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரின் பிரதிநிதி ஒருவரை, இந்த நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்ய நியமிக்குமாறு கோரி அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கையை மாற்றியமைத்ததில் மகிழ்ச்சி.
எனினும் ஆளுநரின் ஒருங்கிணைப்பாளராக அரச அதிகாரி ஒருவர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை நியமிப்பது தொடர்பான சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
இந்த அனைத்து அதிகாரங்களையும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுத்த மாகாண ஆணையாளர்கள், உள்ளூராட்சி ஆணையர்கள், மாநகர ஆணையர்கள், உள்ளூராட்சி சபைகளின் செயலாளர்கள் உள்ளனர்.
இவற்றை நடைமுறைப்படுத்த புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டிய தேவை இல்லை.
முந்தைய சுற்றறிக்கையைப் போலவே, இந்த புதிய சுற்றறிக்கையும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படும். இதில் பின்வாங்கப் போவதில்லை.
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சுற்றறிக்கைகளை முன்வைக்காமல் அச்சமோ கூச்சமோ இன்றி, முதுகெலும்பை நேராக நிமிர்த்தி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் மக்கள் ஆணை மூலம் பதில் கிடைக்கும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 18 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இந்ர ராசியினர் அவர்களே நினைத்தாலும் பிரபலமாவதை தடுக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
