இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல்
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பாக தடயவியல் கணக்காய்வை மேற்கொள்ளுமாறு நாம் பரிந்துரை செய்கின்றோம் எனவும் தாம் மூன்று கடிதங்களையும் மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த கடிதங்களை வாசிக்க முடியுமானவர்கள், அதனை வாசித்தால் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் என்ற வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, இலங்கை கிரிக்கெட்டிற்கு தடைவிதிக்குமாறு கோரப்பட்டுள்ளமை மிகவும் தெளிவாக புரியும்.
கிரிக்கெட் நிறுவனத்தையும் கிரிக்கெட் விளையாட்டையும் தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இந்த நாட்டு பிரஜைகளுக்கு சர்வதேசத்திற்கு கடிதமொன்றை அனுப்பி இலங்கை கிரிக்கெட்டை தடைசெய்யுமாறு எவ்வாறு கூற முடியுமா?
இது தொடர்பாக தற்போதுள்ள விளையாட்டு அமைச்சர் விசாரணைகளை நடத்த வேண்டும் வலியுறுத்தியுள்ள சஜித் பிரேமதாஸ,. இது போலியான கடிதமா அல்லது போலியான கையெழுத்தா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
