இலங்கையில் தீவிரமடையும் நெருக்கடி நிலை! சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
இலங்கை நெருக்கடி நிலை தீவிரமடைந்து வரும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
நாட்டைப் பொறுப்பேற்க தயார்
அதன்படி தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய புதிய கொள்கைகளின் கீழ் நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தேசிய பிரச்சாரம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டை அழிக்கும் அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் அகற்றுவதற்கான தேசிய பிரச்சாரத்தை நாங்கள் செயற்படுத்தி வருகிறோம்.
சர்வஜன வாக்கெடுப்பை நடத்த அனுமதிக்குமாறு உங்கள் அனைவருக்கும் நாங்கள் சவால் விடுகிறோம்.

வாக்கெடுப்புக்கு உடனடியாக வாய்ப்பு கொடுங்கள். அப்போது நாட்டின் பிரச்சினைகளை தீர்க்கும் சிறந்த அணி எது என்பதை நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.
புதிய ஆணையில் நாட்டை ஆளுமாறு மக்களைக் கேட்பதே எங்களின் பணி. நாட்டை பொறுப்பேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
| ரணில் இழைத்த தவறு! சஜித் மற்றும் அநுரவின் சரியான தீர்மானம் | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        