ரணில் இழைத்த தவறு! சஜித் மற்றும் அநுரவின் சரியான தீர்மானம்
ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் எந்தவொரு இடைக்கால நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதற்கான காரணம் என்னவென்பதை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் என்று பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இராஜதந்திரியான மார்க் மெலோச்-பிரவுன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை செய்திருந்தார்.
குறித்த பதிவினை மேற்கோள்காட்டி கருத்து வெளியிடும் போது சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
ரணில் இழைத்த தவறு

அப்பதிவில் அவர் மேலும், இதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
எந்தவொரு இடைக்கால ஏற்பாடுகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்வாங்கப்படக்கூடாது. ஐக்கிய மக்கள் சக்தியும் மக்கள் விடுதலை முன்னணியும் இதனை ஓர் நிபந்தனையாக முன்வைத்தமை சரியான விடயமாகும்.
அதேபோன்று ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறாகும்' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri