தென்னிலங்கையில் பெரும் சோகம் - திருமணத்திற்கு 2 நாட்கள் - கோர விபத்தில் இளைஞன் பலி
மாத்தறை, அக்குரஸ்ஸ பகுதியில் சம்பவித்த கோர விபத்தில் இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளது.
இரண்டு தினங்களில் திருமணத்திற்கு தயாராக இருந்த 25 வயதான லக்மால் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
தனது பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து சம்பவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் லக்மால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞன் பலி
தனது மகனின் திருமணப் பதிவுக்காக இரண்டு நாட்களும், வேலைக்காக இஸ்ரேல் செல்வதற்கு மூன்று நாட்களும் மட்டுமே இருந்த நிலையில் இந்த துயரம் இடம்பெற்றுள்ளதாக லக்மாலின் தந்தை தெரிவித்துள்ளார்.

மகனின் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயாரின் இதயத்தில் இரத்தம் உறைந்ததன் காரணமாக தற்போது அவர் கவலைக்கிடமான நிலையில் மாத்தறை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் லக்மாலின் உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு முன்னரே கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பேருந்து ஓட்டுநர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டதாக உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
எனினும், சட்ட நடைமுறைகளின்படி சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது சாரதி உரிமத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்துச் செய்து நீதிமன்றக் காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam