டிரம்பை உன்னிப்பாகக் கவனிக்காத இலங்கை அரசாங்கம்! மூடப்படும் நிலையில் தொழிற்சாலைகள் - பகிரங்க குற்றச்சாட்டு

Fuel Price In Sri Lanka Sajith Premadasa Iran-US Conflict
By Rakesh Mar 28, 2026 01:21 PM GMT
Report

இலங்கையில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்வதற்குத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இதுவரை வகுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

களனிப் பிரதேசத்தில் நேற்று (27.03.2026) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் போர்ச் சூழல் தீவிரமடைவதை ஒரு வினைத்திறனான அரசாங்கம் முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.

நெருக்கடி 

ட்ரம்பை திட்டமிட்டு ஏமாற்றிய நெதன்யாகுவின் சூட்சுமம்! ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் அமெரிக்கா

ட்ரம்பை திட்டமிட்டு ஏமாற்றிய நெதன்யாகுவின் சூட்சுமம்! ஈரான் விவகாரத்தில் கொந்தளிக்கும் அமெரிக்கா

சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் டிரம்ப் போன்ற தலைவர்களின் கொள்கைகளை உன்னிப்பாகக் கவனித்திருந்தால், இவ்வாறானதொரு நெருக்கடி வரும் என்பதை அறிந்திருக்கலாம்.

ஆனால், இந்த அரசாங்கம் உலக நடப்புகளைப் புரிந்துகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கின்றது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையால் நுரச்சோலை மின் நிலையம் அதன் முழுத்திறனில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்றும் 113 மெகாவோட் மின் உற்பத்தி குறைவாகவே பதிவாகியுள்ளது.

இந்த நிலக்கரித் திருட்டை மூடிமறைக்கவே அரசாங்கம் மின் கட்டணத்தை அதிகரிக்கத் திட்டமிடுகின்றது. தரமற்ற நிலக்கரியால் மின் நிலைய உபகரணங்கள் சேதமடைவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பாரிய மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கைகள் எச்சரிக்கின்றன. விவசாயிகள் தற்போது எரிபொருள் மற்றும் உரத் தட்டுப்பாட்டால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கடுமையான விளைவுகளை கொடுப்போம்..! இஸ்ரேலை எச்சரித்த ஈரான்

கடுமையான விளைவுகளை கொடுப்போம்..! இஸ்ரேலை எச்சரித்த ஈரான்

9500 ரூபாவாக இருந்த உர மூட்டை தற்போது 15 ஆயிரம் ரூபாவைத் தாண்டியுள்ளது. கூப்பன்கள் வழங்கப்பட்டாலும் விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை. இதனால் நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள தொழிற்சாலைகள்

ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட தற்போது மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகள் இலங்கையை விட்டு வெளியேறி ஏனைய நாடுகளுக்குச் செல்கின்றன. இது நாட்டின் அந்நியச் செலாவணி மற்றும் வேலைவாய்ப்புகளைப் கடுமையாகப் பாதிக்கும்.

தேர்தல் காலத்தில் துறைமுக விலைக்கே எரிபொருள் தருவோம் என்று கூறியவர்கள், இன்று எதனையும் நிறைவேற்றவில்லை. இந்தியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் தமது நாட்டு மக்களுக்கு எரிபொருள் வரி நீக்கம் மூலம் நிவாரணம் வழங்குகின்றன.

துறைமுகக் கட்டுப்பாட்டு மோதல்: பனாமா கொடி ஏந்திய கப்பல்களைச் சிறைபிடிக்கும் சீனா

துறைமுகக் கட்டுப்பாட்டு மோதல்: பனாமா கொடி ஏந்திய கப்பல்களைச் சிறைபிடிக்கும் சீனா

ஆனால், நமது அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆக்கபூர்வமான யோசனைகளை நிராகரிப்பதோடு, எம் மீது சேறு பூசும் வேலையையே முன்னெடுத்து வருகின்றது. திறைசேரியிலுள்ள பணத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு உடனடி நிவாரணத் தொகுப்புகளை வழங்க வேண்டும்.

உரத்துக்கான 'வட்' வரியை நீக்கி, மானியத்தை அதிகரிக்க வேண்டும். 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றிய இந்த 'செயற்கை வீரர்கள்' இப்போது அம்பலமாகியுள்ளனர் என்றார்.

GalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US