சுரேஷ் சலே விடயத்தில் தொடரும் சர்ச்சைகள்! மனோரி சலே கூறும் முரணான தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சலே சிஐடியினரால் தடுத்து வைக்கபட்டிருந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில்,சுரேஷ் சலேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறி, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் அந்த நேரத்தில் சாதாரண நோயாளர் அறையில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் அவர் உண்ணாவிரதத்தை கைவிடமாட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே தொடர்பான வழக்கு விசாரணை முதலாம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த விசாரணை மிகவும் கவனத்துடன் கையாளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பல அரசியல்வாதிகள் சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்படும்போது, திடீரென நோயாளிகளாக மாறுகின்றனர்.
இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி...