ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்.. பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Cyclone Ditwah
By Rakesh Apr 08, 2026 06:09 AM GMT
Report

கடந்த 38 நாள்களாக ஆழ்தூக்கத்தில் இருந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தொடர் போராட்டங்களே விழிக்கச் செய்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் 'டித்வா' புயல் நிவாரணத்தைப் போல வெறும் காகித அளவிலான பொய் வாக்குறுதிகளாக அமைந்துவிடக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரைக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு வெற்றி: வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு வெற்றி: வெள்ளை மாளிகை அறிவிப்பு

 செவிமடுக்காத அரசாங்கம்

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பல வாரங்களாக நாம் விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் செவிமடுக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி நாடு முழுவதும் தீப்பந்தம் ஏந்தி நடத்திய போராட்டங்களின் விளைவாகவே, இன்று அரசாங்கம் ஒரு நிவாரணப் பட்டியலை முன்வைத்துள்ளது.

ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்.. பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை | Sajith Premadasa Warns The President

இந்த நிவாரணங்களை வழங்குவதற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை, இவற்றின் அளவை மேலும் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்தது என நாம் கூறியபோது அதனை மறுத்தவர்கள், இன்று ஜனாதிபதியின் உரை மூலம் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வரலாற்றில் முதல் முறையாக இந்த அரசாங்கத்தின் கீழ் மின் உற்பத்தி மிகக்குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தரமற்ற நிலக்கரியால் இயந்திரங்கள் செயலிழந்துள்ளதை ஜனாதிபதியே இன்று சபையில் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தைச் சுருக்குவதன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது. உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் மட்டுமே உண்மையான வளர்ச்சி ஏற்படும். தேர்தலின் போது வாக்குறுதியளித்தது போல சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்.

தற்போது எதிர்க்கட்சிக்குச் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இந்த அழுத்தம் யாரிடமிருந்து வருகின்றது என்பது தெரியவில்லை.

ஜனாதிபதி அநுர அறிவித்துள்ள நிவாரணம்.. பொய் வாக்குறுதிகள் தொடர்பில் சஜித்தின் எச்சரிக்கை | Sajith Premadasa Warns The President

நாம் ஒருபோதும் நாட்டு மக்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம். அரசாங்கம் அறிவித்துள்ள 100 பில்லியன் ரூபாய் நிவாரணப் பொதியில், எரிவாயு விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முற்றாக மறக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 இலட்சம் பேருக்கு இந்த நிவாரணங்கள் சென்றடையாத நிலை காணப்படுகின்றது.

ஒருபுறம் வட் வரியை உயர்த்திவிட்டு, மறுபுறம் சொற்ப நிவாரணங்களை வழங்குவது மக்களை ஏமாற்றும் செயலாகும். நாட்டில் தற்போது உரங்களுக்குகே கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இது குறித்து அரசாங்கம் எவ்விதப் புரிதலும் இன்றி இருப்பதை ஏற்க முடியாது. விவசாயிகளின் உண்மையான நிலைமையைப் புரிந்து கொண்டு உரத் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில் நிலவும் மோசமான வானிலை - சிறுவர்கள், முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் நிலவும் மோசமான வானிலை - சிறுவர்கள், முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மீண்டும் சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்! பிறந்தநாளை கொண்டாடிய அப்போதைய இராணுவ அதிகாரி

மீண்டும் சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்! பிறந்தநாளை கொண்டாடிய அப்போதைய இராணுவ அதிகாரி

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US