ஊடகவியலாளர்கள் கேள்வியை நிராகரித்து வாகனத்தில் ஏறிச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் (Video)
தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்ட போது சஜித் பிரேமதாச அதை நிராகரித்து வாகனத்தில் ஏறி ஓடிச் சென்றுள்ளார்.
மட்டக்களப்பு ஆரயம்பதியில் இன்று (01.02.2023) தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டம் நிறைவு பெற்றதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இன மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனை தொடர்பாகவும் 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கேள்விகள் கேட்கப்பட்டன.
ஊடகவியலாளர்களின் கேள்விகள் நிராகரிப்பு
அத்துடன் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜனாதிபதி தீர்வு ஒன்றை வழங்குவதாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரிய விடயம் தொடர்பாகவும் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் கேட்க முற்பட்ட போது அதை அவர் நிராகரித்து சென்றுள்ளார்.
மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும். தன்னுடைய தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை
எதிர் கட்சித் தலைவர் இன்று நடந்து கொண்ட விதம் தொடர்பாக ஊடகவியலாளர் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இவ்வாறு ஊடகவியலாளர்களுடன் நடந்து கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டின் ஜனாதிபதி, ஆனால் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவர் சிறுபான்மையான தமிழினத்திற்கு எவ்வாறான தீர்வுகளை வழங்குவார் என்ற சந்தேகங்களும் எழும்பியுள்ளது.
மேடைகளில் ஏறி வீரவசனம் பேசும் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிராந்திய
ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றது ஜனநாயகத்தின் நான்காவது
தூணான ஊடகத்துறைக்கு அவர் மதிப்பளிக்கும் விதம் குறித்தும் பாரிய சந்தேகம்
கலந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan
