மக்கள் சார் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம்: எதிர்கட்சி தலைவர் தெரிவிப்பு
வெறும் கோசங்களுக்குச் சுருங்கிப் போகாது புதிய அரசியல் கலாசாரத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (07) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் எதிர்பார்ப்பு
அவர் மேலும், "மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, இந்த உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானது ஒன்றாகும்.

வெறும் கோசங்களுக்குச் சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள்சார் அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அதேவேளை, சபாநாயகர் தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், செயலாளர் நாயகம் தலைமையிலான அனைத்து நாடாளுமன்ற ஊழியர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய ஒரு வருடமாக அமைய வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கை சூழ்ந்துள்ள போர் மேகம் இந்தியாவையும் ஆக்கிரமிக்கும் அபாயம் - நாடு முழுவதும் பறந்த உத்தரவு
தீவிரமடையும் நிலைமை: டுபாய் - அபுதாபியில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை - வெளியானது அறிவிப்பு