மீண்டும் ஒன்று சேர்ந்து திருட சிலர் அழுதுகொண்டே அழைக்கின்றனர்! சாடுகின்றார் சஜித் (Photos)
நாட்டை தனித்தனியாக கொள்ளையடித்த குழுக்கள் தற்போது ஒன்று சேர்ந்து நாட்டை கொள்ளையடிக்க ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று (10.10.2022) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மஹியங்கனை தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஆட்சி

அவர் மேலும் கூறுகையில், தனித்தனியாக செய்த திருட்டுகளும், தனித்தனியாக செய்த மோசடிகளும், தனித்தனியாக நாட்டை வங்குரோத்தாக்கியதையும் இப்போது ஒன்று சேர்ந்து செய்வதற்கு ஒருவரையொருவர் தயார்படுத்தி ஒன்றிணைய முயற்சித்து வருகின்றனர்.
இந்த நாட்டை அழித்து மக்களின் வாழ்க்கையை அசௌகரியத்துக்கு மேல் அசௌகரித்திற்கு உட்படுத்திய கும்பல் இந்த நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது.
அந்த திருடர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர இந்த நாட்டு மக்களும் தயாராக இல்லை. தற்போது மீண்டும் டீல்கார மோசடி கும்பல் ஒன்று சேர்ந்து எழுந்து நிற்க தயாராகி வருகின்றது.
மக்கள் அழுகின்றார்கள்

இந்தநிலையில் இதற்காக ஒன்றிணையுமாறு ஒருவர் (ரோஹித அபேகுணவர்த்தன) அழுது கொண்டே பிச்சை எடுப்பது போல கோரிக்கை விடுக்கின்றார்.
ஆனால், அவ்வாறு அழுகின்ற அவருக்கு இந்த நாட்டில் இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் இன்னும் அழுது கொண்டே வாழ்கின்றார்கள் என்பது புரியவில்லை. தங்கள் குழந்தைகளுக்கு சிறிதளவு பால்மாவை கொடுக்க முடியாமல் தாய்மார்கள் அழுகின்றார்கள்.
உரங்கள் இல்லாததால் விவசாயிகள் அழுகின்றார்கள்.
எதிர்காலமின்றி இளைஞர் தலைமுறையினர் குரல் எழுப்புகின்றனர். பொதுவாக 220
இலட்சம் பேரும் அழுது கொண்டே வாழ்கின்றார்கள். அது அவர்களுக்கு புரியாமல்
இருப்பது ஆச்சரியமாகவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.




