பதற்றத்தினால் மூடப்பட்ட வான் பரப்பு : கட்டுநாயக்கவுக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
மத்திய கிழக்கில் நேற்று(14) இரவு பதற்றம் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்ட நிலையில், குவைத் நகரம் மற்றும் தம்மாம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமானங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL229 நேற்று(14) மாலை 5:10 மணிக்கு பஹாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது,
அதே நேரத்தில் விமானம் UL253 மாலை 6:36 மணிக்கு தம்மாமில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்குப் புறப்பட்டது.
குவைத் சவூதி அரேபியா வான்வெளி மூடல்
இவ்விரு விமானங்களும் ஏர்பஸ் A321neo ரக விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்பட்டன.
விமானங்கள் மத்திய கிழக்கை நெருங்கியபோது, ஈரான் அப்பகுதி முழுவதும் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குவைத்தும் சவூதி அரேபியாவும் தத்தமது வான்வெளிகளைத் தற்காலிகமாக மூடின.

இந்நிலையில் தத்தமது இலக்குகளுக்கு உடனடியாகச் செல்ல இயலாததால், அந்த இரண்டு விமானங்களும் பாதிக்கப்பட்ட வான்வெளிக்கு அருகே சுமார் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக வான்வெளி மூடல்கள் காரணமாக, வேறு பல சர்வதேச விமானங்களும் வானில் வட்டமிட்டுக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இரு விமானங்களும் இன்று காலை (15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பி வந்தடைந்தன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri