ஜனாதிபதியாக பதவியேற்க கனவு காணும் சஜித் : அநுர தரப்பு கிண்டல்
தொகுதி அமைப்பாளர்களே பதவி விலகும் நிலையில் எதிர்வரும் டிசம்பரில் குறுக்கு வழியில் ஜனாதிபதியாகப் பதவியேற்க சஜித் பிரேமதாச கனவு காண்கின்றார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சி
மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தோற்றம் பெற்று இதுவரை எந்தவொரு தேர்தலிலும் வெற்றியடையவில்லை.
அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கத் தகுதி இல்லாத அவர், ஜனாதிபதியாக வருவதற்கு முயற்சிக்கின்றமை வேடிக்கையானது.
தேசிய மக்கள் சக்தி அரசை விமர்சிக்கின்றமைதான் சஜித் பிரேமதாசவின் நாளாந்த வேலையாக இருக்கின்றது.
எமது கட்சியில் குறைகளைக் கண்டுபிடிப்பதை நிறுத்திவிட்டு தமது கட்சியில் இருக்கும் ஓட்டைகளை அடைப்பதற்கு அவர் முயற்சிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri
