மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்: சஜித் கோரிக்கை

Sri Lankan Peoples Sri Lanka Government Iran-Israel War
By Rakesh Mar 03, 2026 08:01 AM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் - ரன்கெத்தகம பகுதியில் நேற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஈரான் வெளியிட்ட தகவல்

புதிய உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஈரான் வெளியிட்ட தகவல்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள மோதலால் அவர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்: சஜித் கோரிக்கை | Sajith Demands Protection Of Sri Lankan Workers

நாட்டுக்கு 'மூச்சு' தரும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ரணசிங்க பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.

பிள்ளைகளுக்குச் சரியான கல்வியுடன், அறநெறிப் பண்புகளையும் சமச்சீரான உணவையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

அரசின் மந்தநிலை

தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இன்று 120 ரூபாவைக் கூட வழங்கவில்லை. 80 ரூபாவுக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

இதற்கான தீர்வை வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனப் பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கூறுகின்றனர். இலங்கையில் வறுமை அதிகரித்துள்ள சூழலில், அரசு நிலக்கரி இறக்குமதியிலும் முறைகேடுகளைச் செய்கின்றது.

மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்: சஜித் கோரிக்கை | Sajith Demands Protection Of Sri Lankan Workers

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டம் குறித்துப் போதிய தெளிவில்லாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார். 

மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்: சஜித் கோரிக்கை | Sajith Demands Protection Of Sri Lankan Workers

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! இலங்கையிலும் விமான சேவைகள் இரத்து

வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல் : ஒரே நேரத்தில் இலக்கு வைக்கப்பட்ட ஈரான் - லெபனான்

வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்த இஸ்ரேல் : ஒரே நேரத்தில் இலக்கு வைக்கப்பட்ட ஈரான் - லெபனான்

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US