பதவி பறிபோகும் ஆபத்து! - அச்சத்தில் இருக்கும் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தால், சபை நடவடிக்கைகளில் சஜித் பிரேமதாச விரைவில் கலந்துகொள்வார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், ஐக்கிய மக்கள் சக்தி சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ள நிலையில், சபைக்கு ரணில் வந்திருப்பதால் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ மிகுந்த அச்சத்தில் இருக்கின்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை என்னிடம் தொலைபேசியில் கூறினார்.
இந்நிலையில், தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிப்போகும் என்கிற அச்சத்தில் உள்ள சஜித் பிரேமதாச, சபை நடவடிக்கைகளில் விரைவாக கலந்துகொள்வார் எனவும் தெரிவித்தார்.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
